சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. முதல்வருடன் 20ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.  சென்னையில் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் இந்த  ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில்  முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனையில் அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவது , பள்ளிகள் திறப்பு நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது. செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே செப். 1 முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here