ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு, 15-ம் தேதி புனித வெள்ளி ஆகிய 2 நாட்களும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் 16-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

18-ம் தேதி (திங்கள்) முதல் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.