தமிழகத்தைப் போல் புதுச்சேரியி லும் செப்டம்பர் 1-ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கரோனா இரண்டாம் அலைக்கு பிறகு புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்புகள் நடத்த ஜூலை 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றுகுறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டன. ஆனால் நோய்தொற்று முழுமையாக குறைய வில்லை எனக் குறிப்பிட்டு பள்ளி, கல்லூரி திறப்பை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தள்ளி வைத்தார். ஆகஸ்ட் 15-க்கு பிறகு ஆளுநர், முதல்வருடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரி திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், அதுபோல் கூட்டம் ஏதும் நடக்க வில்லை.

இந்நிலையில் தமிழக அரசு செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் கல்லூரிகள், பாலி டெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்பட வில்லை.

இதுபற்றி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமா ரன் கூறுகையில், “புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் நாள் ஜூலையில் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஜூலை 15 முதல் அரசு ஊழியர்கள் 100 விழுக்காடு பணிக்கு திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிடவில்லை. இதனால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழக்குதல், மாணவர் சேர்க்கை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளும் முறையாக அனைத்து ஆசிரியர் களும் நடத்தவில்லை. ஏழை எளியமாணவர்கள் போதிய வசதி இல்லா ததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத ஆசிரியர்கள் மீதும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்விபாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் புதுச்சேரி அரசுமாணவர்கள் நலனில் அக்கறைசெலுத்தவில்லை. பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, தமிழ கத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் செப்டம்பர் 1 அன்று பள்ளி கல்லூரிகளை திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.