நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று மாலை வீடு திரும்பினார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 14-ம் தேதி மாலை வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்குட்டுவேலு தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலை சீரான நிலையில் அவர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஓரிரு தினங்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும், அதுவரை சங்கர் ஜிவால் கவனித்து வந்த பொறுப்புகளை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கவனித்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.