சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். இதனிடையே அனைத்து சிக்கல்களும் சரியாகி விட்டது. படம் இன்று வெளியாகும். ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையரங்கில் வெளியானது.

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த சிலமணி நேரங்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்ததாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை மற்றும் தென் தமிழ்நாட்டு கடல்பகுதிக்கு நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.