சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் ரேஷன் கடைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம் ரூ.500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை சென்னை, பசுமை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலமிகு சென்னை, கல்வியில் சென்னை உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் சென்னையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

குறிப்பாக பசுமை சென்னை மற்றும் எழில்மிகு சென்னை திட்டத்தில் சென்னையில் பல இடங்களில் மரங்கள் நடப்பட்டுவருகிறது. பொது இடங்களில் உள்ள சுவர்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ரேஷன் கடைகளை மேம்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இதன்படி வட சென்னையில் உள்ள அமுதம் கூட்டுறவு நியாவிலைக் கடையின் வெளிப்பகுதியில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்த நியாவிலைக் கடை கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷணன் நேரில் பார்வையிட்டார். மேலும், இந்தப் பணியை மேற்கொண்ட மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் சரவணன் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.