வங்கக் கடலில் நேற்று வரை நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை கடந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியாக வழுவிழந்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வங்கக் கடலில் நேற்று வரை நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கே சென்றது.
புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே இன்று கரையை கடந்தது. தொடர்ந்து அது வழுவிழந்து நன்கமைந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி
மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

இன்று காலை 11.30 மணிநேர நிலவரப்படி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய, கர்நாடகா மற்றும் ராயலசீமாவின் உள்பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் படிப்படியாக வலுவிழக்க அதிக வாய்ப்புள்ளது

மழை எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்திற்கான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வருமாறு:
பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ராயலசீமா, கர்நாடகா மற்றும் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புண்டு.

தெற்கு கடலோர ஆந்திரா, ஏனாம், தெலங்கானா மற்றும் கேரளா & மாஹே பகுதிகளில் நாளை மழைகக்கு வாய்ப்புண்டு.

மழையளவு:

இன்று காலை 0830 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு (செ.மீ.) :

தமிழ்நாடு, புதுச்சேரி: புதுச்சேரி புதுச்சேரி-19, தருமபுரி-18, ஹரூர் மற்றும் பாலக்கோடு-12, உத்திரமேரூர்-14, கடலூர்-கடலூர்-14, உத்தங்கிரி-14, பெனிகொண்டாபுரம்-11,
பாரூர்-10, செய்யூர்-10, ராணிப்பேட்டை-வாலாஜா-12, திருப்பத்தூர்-ஆலங்காயம்-13;

ஆந்திரா: பிரகாசம்-கண்டுகூர்-11, நெல்லூர்-வெங்கடகிரி-10, சுல்லுபிரேதா-8,
உதய்கிரி, விஞ்சமூர், ராப்பூர் மற்றும் ஆத்மாகுன்- தலா 7; கிழக்கு கோதாவரி-ஆம்லாபுரம்-9, கிருஷ்ணாஅவனிகடா-7.

ராயலசீமா: அனந்தபுரம்-நம்புலிபுலிகுண்டா-24, ஒய்எஸ்ஆர்-சம்பால்பூர், ராயச்சோட்டி மற்றும் வேமபள்ளே தலா18, புலிவெந்தலா-17, லக்கிரெட்டிபள்ளே-16.

குஜராத் பகுதி: மெஹ்சானா-தரோய் காலனி-8, நர்மதா-திலக்வாடா-7, சபர்கன்யாஇதர் மற்றும் வடலி-7.

கர்நாடகா: பெங்களூரு: ஹோஸ்க்டே-10, எலக்ட்ரானிக் சிட்டி-12;
சிகபல்லாபுரா: சிந்தாமணி-12; கோலார்: பங்கபேட்-18, மாலூர்-17, கோலார் பொதுப்பணித்துறை-15; தும்குரு:
குப்பி-15. இவ்வாறு தெரிவித்துள்ளது.