பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற வி.பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளராக பதவி வகித்துவந்த செல்வ நாகரத்தினம் சென்னையில் உள்ள தமிழக காவல் துறை பயிற்சி பள்ளி துணை இயக்குநராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் இருந்த வி.பத்ரிநாராயணன் கோவை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் வி.பத்ரிநாராயணன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னுரிமை அளிக்கப் படும். அவர்களுக்கு எதிரான குற்றங்கள், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்களுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும்.

இளைஞர்களை பாதிக்கக்கூடிய கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப் படும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு காவல் துறை பணியில் இணைந்த வி.பத்ரிநாராய ணன், நாகப்பட்டினத்தில் உதவி கண்காணிப் பாளராக (பயிற்சி) நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்ல புரத்தில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். 9 மாதங்கள் அங்கு பணி செய்த நிலையில், 2020-ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.