சிவகங்கை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகள் வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட மாட்டாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை. நியாயவிலைகடைகள் மூலமே வழங்கப்படும். கரும்புகள் வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட மாட்டாது.

தமிழக விவசாயிகளே 12 கோடி கரும்புகளைப் பயிரிட்டுள்ளனர். நியாயவிலை கடைகளுக்கு 2.19 கோடி கரும்புகள்தான் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளன. இதில் நலிவடைந்த 2,000 சங்கங்களும் சீரமைக்கப்படும் என்றார்.