மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600-க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும். அனைத்து தகுதி வாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கும் அகண்ட அலை வரிசை இணைப்பு பாரத்நெட் இணைப்புத் திட்டத்தின் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலத்திலுள்ள 12,525 கிராமங்களுக்கும் குறைந்தபட்சம் 1 ஜிபிபிஎஸ் அலைவரிசை இணைப்பு கண்ணாடி இழைவடம் (optical fibre) வாயிலாக வழங்கப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகள் பெரிதும் மேம்படுத்தப்படும்.