ராஜராஜ சோழனின் ஆட்சியில் தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார். மேலும்,அவரது ஆட்சியில் ‘தமிழகம்’ ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நினைவு கூர்ந்தார். ” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.