சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு சென்னை விமானநிலையம் வந்த விஜயகாந்த் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். அந்த வகையில், மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் அமெரிக்காவுக்கு மீண்டும் இன்று புறப்பட்டுச் சென்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் முன்பு போல தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு சென்று வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருகிறார்.

தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விஜயகாந்த் பெரும்பாலும் தவிர்த்து வந்த நிலையில், கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்றார். சமீபத்தில் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு விஜயகாந்த் வெயிட்ட அறிக்கையில், தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

உடல் நலக்குறைவால் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை எடுத்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மேல் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இன்று காலை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில், கொரோனா கட்டுப்படுகள் காரணமாக உடல் பரிசோதனை செய்ய அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்த நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு விமானநிலையம் வந்த விஜயகாந்த் முழு உடலையும் மறைக்கும் வகையில் கோட் அணிந்திருந்து, தொப்பி மற்றும் மாஸ்க் கொண்டு முகத்தையும் மறைத்திருந்தார்.

அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றார். 2018ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த், தற்போது மீண்டும் அங்கு சென்றுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் நடைபெற்ற, விஜயகாந்தின் பிறந்தநாளும் மிகவும் எளிமையாகவே கொண்டாடப்பட்டது.

சமீபத்தில் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.