தி.மலைவட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. தலைவர் சண்முகம் தலைமைவகித்தார். செயலாளர் சங்கர் வர வேற்றார். வரவு செலவு கணக்கை பொருளாளர் ரத்தினவேல் தாக்கல் செய்தார். முன்னாள் தலைவர்கள் வடிவேலு, பிச்சாண்டி, உபாத் தியாயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்ஏ எம் விக்ரமராஜா சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில இணை செயலாளர் செந்தில்மாறன், வேலூர் மாவட்ட தலைவர் ஞான வேல், வணிகர் பேரமைப்பு மாநில செயலாளர் கோவிந்தராஜுலு உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இரு சக்கர வாகன மற்றும் கார் பேரணி நடைபெற்றன.

இதையடுத்து செய்தியாளர் களிடம் விக்கிரமராஜா கூறும் போது, “ஈரோட்டில் மே 5-ம் தேதிவணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது. வணிகர் உரிமை முழக்க மாநாடு என்ற தலைப்பில் நடைபெறும். சாமானிய வணர்களை துடைத்தெறிய, கார்ப்பரேட் நிறுவனங்கள் களம் இறங்கி கொண்டிருக்கிறது.

இதனை கட்டு படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள், உரிய சட்ட திருத்தத்தை நிறைவேற்றி, சாமானிய வணிகர் களை பாதுகாக்க வேண்டும் எனதீர்மானத்தை நிறைவேற்ற உள்ளோம். திருவண்ணாமலை மார்க்கமாக வரக்கூடிய சாலைகளை விரைவாக அமைக்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்துள்ளதை மதுரை நீதியரசர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். சாமானிய வணர்கள் மீது ஒரு பார்வையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது ஒரு பார்வையும் என்ற அடிப்படையில் செயல்படும் மத்திய அரசை வணிகர்கள் எதிர்த்து வருகின்றனர்.

ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுடன் ஆளுநர் துணை இருக்க வேண்டும். மேலும் ஒரு உயிரை இழக்கக்கூடாது.

வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால், தொழிற் கூடங்கள் காலியாகிவிடும். 70 சதவீதத்தை வட மாநில தொழிலாளர்கள்தான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றனர். வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் முழு பாதுகாப்பு வழங்குகிறது. விலை உயர்வுக்கு காரணமே, சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகள்தான்.

காலாவ தியான சுங்க சாவடிகள் அகற்றப் படும் என மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி கடந்த 6 மாதத்துக்கு முன்பாகவே தெரிவித்துள்ளார். 60 கி.மீ., தொலைவுக்கு உள்ளடக்கிய சுங்க சாவடிகளை அகற்றுவோம் என கூறியிருந்தார். சொன்னது சொன்னபடியே உள்ளது, சுங்க சாவடி கட்டணம் உயர்ந்து கொண்டேஇருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.