பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத 92 டன் கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க  இந்திய உணவு கழகம் உத்தரவிட்ட நிலையில், இது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த இரண்டு அரவை மில் மற்றும் குடோன் நிலைய அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள விவாசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம்  நெல் பெறப்பட்டு தமிழகம் முழுவதும் அரவைக்கு அனுப்படும். தமிழகத்தில் 21 அரசு ஆலைகளுக்கும், 474 தனியார் அரவை ஆலைகளுக்கும் இரயில்கள் மூலம் அனுப்படும். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 34 அரவை ஆலைகளுக்கு அனுப்படுவது வழக்கம்.

இதில் பெறப்படும் அரிசி பொது விநியோக திட்டத்தின் படி நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்நிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடோன்களில் சேமிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்களை கடந்த மார்ச் மாதம் இந்திய உணவு கழக அதிகாரிகள் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆய்வு மேற்கொண்டத்தில், அங்கு 1,850 மூட்டைகளில் 92.500 டன் எடையுள்ள பழுத்த மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அரிசிகள் கெட்டு போய் இருப்பதை அதிகாரிகள்  கண்டறிந்தனர்.

இதில்  5.20% சேதமடைந்த அரிசிகளும், 7% பழுத்த அரிகளும் உள்ளடங்கும். இந்திய உணவு சட்டத்தின் படி ஐந்து சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருக்கக் கூடாது என நிபந்தனைகள் உள்ள நிலையில்,  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அரசு கொள்முதல் செய்யப்பட்ட  மூட்டைகளில்  5.20%, மற்றும் 7%  பாதிப்பு உள்ளது. எனவே இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  பயன்படுத்த கூடாது, மேலும் இது தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கையை அளிக்குமாறு இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உமாமகேஷ்வரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டப்போது, உணவு பொருள் தர கட்டுப்பாட்டு துறை பொறுத்தவரை சில நிபந்தனைகள் இருப்பதாகவும், அந்த நிபந்தனைகளை படி அரிசி பழுப்பு  மற்றும் சேதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகள் இருக்கலாம் என்றும், ஆனால் அவர்கள் நிபந்தனைகளை தாண்டி சேதமடைந்த அரிசிகளை வைத்துள்ளார்கள்.

 

எனவே, அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை கொடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்திய உணவு கழகம் கூறியது போல் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 32 அறுவை ஆலைகள் செயல்படுகிறது. அதில் கும்பகோணத்தை சேர்ந்த மாகன்பாபு மற்றும் KLS ஆகிய இரண்டு அறுவை ஆலைகளுக்கு மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்து அவர்கள் மீது துறை நதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மற்ற மாவட்டங்களை விட தஞ்சை மாவட்டத்தில் அதிக விளைச்சல் உள்ளதாகவும் எனவே அதை சேமித்து வைப்பதில் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் உமாமகேஷ்வரி தெரிவித்தார். முறையாக நாம் வைத்து பராமரித்தாலும், அதிக சேமிப்பால் இந்த மாதிரி சேதங்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.

 

சன்னரகம் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் குண்டு ரக அரிசியை மக்கள் வாங்காதால் அதிக சேமிப்பு வைக்க கூடிய நிலை ஏற்படுவதாக தெரிவித்த உமாமகேஷ்வரி,  எந்த அரவை மில் தவறு செய்துள்ளதோ, அந்த  ஆலை புதிதாக அரிசி வழங்க வேண்டும் என அறிவுறுத்துவோம்,  இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தார்.