கட்டணங்கள் ஏதுமின்றி மற்ற கிளைகளில் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரை எடுக்கலாம்.

வாடிக்கையாளர்களிடம் பணம் எடுப்பதற்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் வங்கிகளின் லிஸ்டுகளை

பொதுவாகவே நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் சேவையில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பது உங்களின் கடமை. அதிலும் பணம் எடுக்க, போட, அனுப்ப என்னென்ன விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது, அதற்கு எவ்வளவு கட்டணங்கள் நம்மிடையே வசூலிக்கப்படுகின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவசர தேவைக்கு நீங்கள் அதிகப்படியான பணம் எடுக்க அல்லது போட வேண்டிய சூழ்நிலை வந்தால் அப்போது நீங்கள் விதிமுறை புரியாமல் குழம்பி கொள்ள வேண்டாம். முன்பே அறிந்து வைத்திருப்பது நல்லது.

அந்த வகையில் ஸ்டேட் பேங்க் உட்பட முக்கிய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு பணம் எடுப்பதில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்றப்படுகின்றன என்ற தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். முதலில் எஸ்பிஐ வங்கி கொண்டிருக்கும் ரூல்ஸை பார்ப்போம். எஸ்பிஐயில் வாடிக்கையாளர்கள் கணக்கு திறக்கப்பட்ட கிளையை தவிர மற்ற கிளைகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரை மட்டுமே எடுக்க முடியும். அதேபோல, செக் மூலமாக எடுப்பதாக இருந்தால் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே எடுக்க முடியும்.

அதே போல், எச்.டி.எப்.சி வங்கியை எடுத்துக்கொண்டால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மெஷினில் ஒரு நாளைக்கு ரூ.10,000 எடுக்கலாம். ஒரு நாளை ரூ.25000 வரை பணப்பரிவர்த்தனை செய்யல்லாம். ஐசிஐசிஐ வங்கியின் ரூல்ஸ் இதுதான் கணக்கு திறக்கப்பட்ட வங்கிக் கிளையில் ஒரு மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே எடுக்க முடியும். அதே போல் கட்டணங்கள் ஏதுமின்றி மற்ற கிளைகளில் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரை எடுக்கலாம்.