மூணாறில் இன்று முதல் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

கேரள மாநிலம் மூணாறில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி மூணாறு பொட்டானிக்கல் கார்டனில் இன்று தொடங்க உள்ளது.

தேவிகுளம் எம்எல்ஏ எ.ராஜா தலைமையில், கேரள அமைச்சர் முகம்மது ரியாஸ் தொடங்கி வைக்கிறார். தினமும் மாலை நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய நடனம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

வரும் 10-ம் தேதி வரை தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை மலர் கண்காட்சி நடைபெறும். கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, குழந்தைகளுக்கு ரூ.30. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு செய்துள்ளது.