Site icon Metro People

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் கோவிட் பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 18,819 ஆக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நான்கு மாதத்திற்குப் பின் தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 13,827 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 39 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,116ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் தினசரி டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்று 4.16 சதவீதமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 430 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

கேரளாவில் புதிதாக 4,459 பேருக்கும், மகாராஷ்டிராவில் புதிதாக 3,957 பேருக்கும், கர்நாடாகாவில் புதிதாக 1,945 பேருக்கும் டெல்லியில் புதிதாக 1,109 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

Exit mobile version