இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 57.22 கோடியை கடந்தது

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 54,71,282 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 57.22 கோடி (57,22,81,488). 63,56,785 அமர்வுகள் மூலம் இது சாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 36,555 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,15,61,635. இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 97.54.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு, தொடர்ந்து 54 நாட்களாக 50,000க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, புதிய பாதிப்பு குறைவாக இருப்பதால், கோவிட் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 3,63,605-ஆக உள்ளது. கடந்த 150 நாட்களில் இது மிக குறைந்த அளவு.

கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் தற்போது 1.12. நாடு முழுவதும் கோவிட் பரிசோதனை தொடர்ந்து விரிவு படுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,86,271 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை 50.26 கோடிக்கு மேற்பட்ட (50,26,99,702) கோவிட் பரிசோதனைகளை செய்துள்ளது.

வாராந்திர கோவிட் பாதிப்பு வீதம் 1.93. கடந்த 56 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு வீதம் 1.94. இது கடந்த 25 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.