2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள், உயரிய பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும்.

மறைந்த மத்திய அமைச்சரின் மனோகர் பாரிக்கருக்கான பத்ம பூஷண் விருதை அவரது மகன் பெற்றுக் கொண்டார்.

பின்னா் டெல்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், 2020ஆம் ஆண்டு 141 பேருக்கும், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பத்ம பூஷண் விருது பெறும் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா

2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. கரோனா பேரிடர் காரணமாக, கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2020 ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 7 பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

அமர் சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன்

2020ம் ஆண்டுக்கான 4 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 61 பத்ம ஸ்ரீ விருதுகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் இன்று வழங்கினார். மங்களூருவில் பழம் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருவாயில் தனது கிராமத்தில் பள்ளி தொடங்கி சேவை செய்து வரும் பழ வியாபாரி ஹர்கலா ஹாஜப்பா குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.