புதுச்சேரி கடற்கரையில் காந்தி திடல் அருகில் அமைந்துள்ள தியாகச் சுவரில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர் பலகை பதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வீரசாவர்க்கர், வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் பெயர் பலகைகளை புதுவை துணை நிலை ஆளுநர் திறந்து வைத்தார்.

இந்நிலையில்  தியாகச் சுவரில் வீரசாவர்க்கர் பெயர் பலகை திறக்கப்பட்டதை கண்டித்து அமைப்புகள் சில போராட்டத்தில் ஈடுபட்டன. அந்த அமைப்புகளைக் கண்டித்து பாஜக சார்பிலும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வீரசாவர்க்கர் குறித்து புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாட்டின் விடுதலைக்காக போராடிய வீர சாவர்க்கர் 10 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு நாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும் என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன், வீர சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்ததில் எந்த தவறும் இல்லை என்றார்.  இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழிசை சவுந்தரரஜன், அப்படி அரசியல் ஆக்கினால்கூட அதனை எதிர்கொள்ள தயார் என சவால் விடுத்தார்.

நாடிற்காக போராடியவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுகொண்ட தமிழிசை சவுந்தரராஜன்,  தேசத்தை பற்றி தெரியாதவர்கள்தான்
வீர சாவர்க்கரை எதிர்ப்பதாக சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here