காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெள்ளம், மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல் குளிர் அலை, தூசிப் புயல், புயல், வெப்ப அலை, இடி, மின்னல், பனிப் பொழிவு, மூடுபனி முதலானவற்றின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு அதிகரித்துள்ளது.
மின்னல்: இந்தியாவில் 2022-ம் ஆண்டு அதிகம் தாக்கிய இயற்கைப் பேரிடர்களில் மின்னல் முதல் இடத்தில் உள்ளது. இதன்படி, 2022-ம் ஆண்டு மட்டும் 566 மின்னல் தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக 907 பேர் மரணம் அடைந்தனர். 2021-ம் ஆண்டில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் மூலம் 640 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.