சென்னை: சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் தொடங்கப்படும். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.