எழுத்துப் பணிகள் முழுவதும் முடிந்ததும், படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.
தேவர் மகன் 2 படத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
1992-ல் இயக்குநர் பரதன் இயக்கிய படம் ‘தேவர் மகன்’. கமல் ஹாசன் திரைக்கதை எழுதி நடித்திருந்தார். அவருடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேசிய விருது பெற்ற இப்படம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.
இந்நிலையில், பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனுக்காக கதை ஒன்றை எழுதி வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் தெரிவித்திருந்தார். தேவர் மகன் 2 படத்துக்காக தான் கமல் தற்போது கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எழுத்துப் பணிகள் முழுவதும் முடிந்ததும், படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம். அதோடு இந்தப் படத்தில் விக்ரம் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கமல் தயாரிப்பில் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறிப்பிடத்தக்கது.