சென்னை: திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக் கொள்வோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொதுமறை என்று சொல்லத்தக்க வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய திருக்குறளைத் தந்திட்ட திருவள்ளுவரின் தினமாக இன்றைய நாளை கொண்டாடுகிறோம்.

திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக் கொள்வோம். ஜெயலலிதாவின் கோரிக்கையான திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய நெடுநாள் எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.” என்று கூறியுள்ளார்