திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் (பகிர்மானம்) கி. செல்வகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மழைக் காலத்தில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
காற்று, மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால், அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அல்லது தொட முயற்சிக்கவோ கூடாது. இடி, மின்னலின்போது வெட்டவெளியிலோ, மரங்களுக்கு அடியிலோ, மின்கம்பங்கள், மற்றும் மின் கம்பிகளுக்கு அடி யிலோ தஞ்சம் புகாதீர்கள். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் இருக்கலாம். இடி, மின்னலின்போது மின்சாதன ங்கள், கைபேசி மற்றும் தொலை பேசியை பயன்படுத்த கூடாது. மழையின்போது வீட்டு சுவரில் தண்ணீர் கசிவு இருந்தால் அப்பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகி ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். காற்று மற்றும் மழை காரண மாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந் தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்க கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பத்துக்கு போடப்பட் டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ கூடாது. மேலும் மின்கம்பங்களில் கொடிகள், துணிகளை காயப்போடுவது கூடாது.
மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின்இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மின்வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின்போது அவசரகால உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் மின்னகம் என்ற மின்நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.