போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ஆற்றுப்பாலகள் அமைக்கம் பணியும் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் எங்கெல்லாம் மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன? அவற்றின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

2021-22ம் ஆண்டில் மேடவாக்கம் (தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதி) மற்றும் வேளச்சேரி மேம்பாலப் பணிகள் ரூ. 203.21 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

கோயம்பேட்டில் சாலை மேம்பால பணிகள் ரூபாய் 93.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

திருவான்மியூர் சந்திப்பில் உள்ள சாலை மேம்பால பணிகள் ரூபாய் 219.92 கோடி மதிப்பிற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூபாய் 58 கோடி மதிப்பிற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

14 சாலை மேம்பால பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளன. இவற்றில் 13 சாலை மேம்பால பணிகளுக்கு ரூபாய் 1100.07 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈ.வே.ரா. சாலையில், ராஜா முத்தையா சாலை சந்திப்பு முதல் புல்லா நிழற்சாலை சந்திப்பு வரை உயர்மட்ட பாலம் அமைத்தல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து பரிசீலனையில் உள்ளது.

அண்ணாநகர் 3ஆவது நிழற்சாலை மற்றும் ஈ.வெ.ரா. சாலையை இணைத்து மேம்பாலம் அமைக்கும் பணியில் வழிகாட்டுதல்கள் குழுவின் பரிந்துரைகளின்படி, ரசாக் தோட்ட சந்திப்பு முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆற்றுப்பாலங்கள்:

திருவற்றியூர் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே மற்றும் பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு ஆற்றுப்பால பணிகள் ரூபாய் 77.01 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

நோளம்பூரில் கூவம் ஆற்றின் குறுக்கே ஆற்றுப பாலம் அமைக்கும் பணிக்கு 36 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாடிக்குப்பத்தில் கூவம் ஆற்றுன் குறுக்கே ஆற்றுப் பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.