கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தண்ணீர், உணவைத் தேடி காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதி பேத்துப்பாறை, பாரதி அண் ணாநகர், கணேசபுரம் அஞ்சுரான் மந்தை, அஞ்சு வீடு ஆகிய பகுதிகளில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மலைகிராமப் பகுதிகளில் பலா, வாழை, காப்பி ஆகியவை பயிரி டப்பட்டுள்ளன.

வழக்கமாக, அவ்வப்போது இந்தப் பகுதிகளுக்கு வந்து செல் லும் காட்டு யானைகள் தற்போது தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இத னால் மலைக் கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் புற்கள் காய்ந்து விட்டன. இதனால் அவ்வப்போது காட்டுத் தீயும் மலைப் பகுதிகளில் பரவி வருகிறது. இதனால் புற்கள் கிடைக்காமல் யானைகளுக்கு கடும் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்பம் அதிகரிப்பால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு, தண்ணீரைத் தேடி வனப்பகுதியில் இருந்து விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன.

அவை தோட்டங்களில் விளைந் துள்ள வாழை மரங்களை சேதப் படுத்துவதால், விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகி உள் ளனர். கடந்த சில நாட்களாக, யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தோட்டப் பகுதிகளுக்குச் செல் லவே அஞ்சுகின்றனர்.

யானைகளின் நடமாட்டத்தால் தோட்ட வேலைக்கும் ஆட்கள் வருவதில்லை.

இதனால் வனப்பகுதிகளில் யானைகளுக்கு உணவு, தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். வனத்தில் மெகா தொட்டிகள் அமைத்து தண்ணீரை நிரப்பினால் யானைகள் விளை நிலங்களுக்குள் வராது என விவசாயிகள் தெரிவித்தனர்.