விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நண்பனையே கொலை செய்து ஏரியில் புதைத்த இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தை சார்ந்த கவியரசன்(26) சென்னையில் பேக்கரியில் வேலை செய்துக்கொண்டிருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய கவியரசன், நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கவியரசன் மீது  விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் கவியரசன் காணாமல் போனதாக அவரது தந்தை கலியமூர்த்தி புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல்துறையினர் கவியரசனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கவியரசனுக்கும் அவரது நண்பனான ராம்குமாருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கவியரசனும், ராம்குமாரும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அதிக மதுபோதையில் இருந்த கவியரசனை முன்விரோதம் காரணமாக ராம்குமார் நணபர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாதபடி உடலை அதே ஊரில் உள்ள ஏரியில் புதைத்துள்ளார்.

இதனையடுத்து ராம்குமாரை கைது செய்து கவியரசனை புதைத்த இடத்தை அடையாளம் காட்ட சொல்லி கண்டறிந்தனர். ஏரியில் நீர் உள்ளதால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தநிலையில் 3 நாள் தேடுதலுக்கு பிறகு நேற்று போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து கவியரசனின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அன்புமணி ராமதாஸ். சஞ்சய், ராம்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும்  இந்த கொலையில் தொடர்புடை 5 பேரை திவீரமாக தேடி வருகின்றனர்.