Site icon Metro People

திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி: மதுரையில் அண்ணாமலை பேட்டி

திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை ஆத்திகுளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.நிவாசனை சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன். ஊரடங்கு தளர்வால் உள்ளரங்கு கூட்டங்களை நடத்த உள்ளோம். சிந்தாந்த அடிப்படையிலான கட்சிதான் பாஜக. திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம், அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்.

மோடியின் நலத் திட்டங்களால் தமி ழகத்தில் மூன்றரை கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளது.

தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது. ஒட்டுக் கேட்பது குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெகாசஸ் ஸ்பைவேரிடம் எண்கள் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசி யல் காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தியால்தான் ஒட்டுக் கேட்பு விவகாரம் பேசப்படுகிறது.

தனிமனித சுதந் திரத்தை பாதுகாக்கும் கட்சி பாஜக.

திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளதுதான் திமுகவின் சித்தாந்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version