பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்தார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கரோனா 3 வது அலை பரவும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார்.
அவர் அளித்த பேட்டி:
பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதா?
3 வது அலை வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும், ஒருவேளை வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களும் தமிழக அரசின் சார்பில் வகுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இப்போதுள்ள சூழ்நிலையில் திறக்க முடியாத நிலை உள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைத்து தரப்பு கருத்தைக்கேட்டு முடிவெடுக்கப்படும்.