Site icon Metro People

முகக்கவசம் அணியாத 18 லட்சம் பேருக்கு அபராதம்: கடந்த 101 நாட்களில் போலீஸார் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் கரோனாபொதுமுடக்க விதிகள் அமலில்உள்ளன. முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த ஏப்.8-ம் தேதியில் இருந்து, கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதை போலீஸார்தீவிரப்படுத்தினர். அதன்படிஏப்.8 முதல் ஜூலை 17 வரை 101 நாட்களில் முகக் கவசம் அணியாத 18 லட்சத்து 7,651 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். அனைவருக்கும் தலா ரூ.200 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதோடு, நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாகக் கூறி,வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, தமிழகம் முழுவதும் கடந்த 101 நாட்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை எனக்கூறி, 88,836 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலும் இந்த வழக்குகள் கடைக்காரர்கள் மீதும், பொதுஇடங்களில் கூட்டமாக நின்றவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டத்தைக் காண முடிகிறது. இதனால் கரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து பொதுஇடங்களில் கூட்டமாக நிற்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

#NoMask #Mask #News #MetroPeople #chennai #TamilNadu

Exit mobile version