Site icon Metro People

15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப் புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 25-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version