சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கும் விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.76,400-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.108 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாகவும் இருந்தது.