Site icon Metro People

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் 5 குழந்தைகளுடன் தவித்த 2 பெண் அகதிகள்: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்

தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 5 குழந்தைகள் உட்பட 7 இலங்கைத் தமிழர்களை தனுஷ்கோடி அருகே உள்ள மணல்தீடையில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று தலைமன்னார் போலீஸிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும்உணவுப் பொருட்களின் விலைஉயர்வு காரணமாக, அந்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை தனுஷ்கோடி அருகே ஏழாம் தீடையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் போலீஸாருக்கு தகவல்கொடுத்துள்ளனர். ஆனால் ஏழாம்தீடை பகுதி இலங்கைக்குச் சொந்தமான பகுதி என்பதால் அவர்களை மெரைன் போலீஸார் மற்றும் கடலோர காவல்படையினரால் மீட்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் ஏழாம் தீடையில் இருந்த 2 பெண்கள், 5 குழந்தைகளை பிடித்து சென்று தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Exit mobile version