அமராவதி: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத்திலும், திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் நாராவாரிபல்லி கிராமத்திலும் சொந்த வீடு உள்ளது.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைநகர் அமராவதியில் சொந்த வீடு கட்ட முடிவு செய்தார். இதனை தொடர்ந்து, நேற்று வெலகபுடி செயலகம், இ-9 தேசிய நெடுஞ்சாலையில் 1,455 சதுர அடியில் வீடு கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அடிக்கல் நாட்டு விழாவில்மனைவி புவனேஸ்வரியுடன் தம்பதி சமேதராக பூமி பூஜையில் கலந்து கொண்டார். இவர்களுடன் சந்திரபாபுவின் மகனும், அமைச்சருமான லோகேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார்.