நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால், நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.70 ஆகவும் சென்னையில் ரூ.6.30 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.