சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது.

19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்
அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டோனி, டிவால்ட் பிரேவிஸ், ஊர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் முகமது, கலீல் அகமது, அன்ஜூல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எலிஸ் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி டிரேடிங் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக அந்த அணிக்கு ரவீந்திர ஜடேஜா , சாம் கர்ரன் ஆகியோரை விட்டுக்கொடுத்துள்ளது. இதில் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. அந்த வீடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பேசிய வசனமான ‘வரவேண்டிய நேரத்துல கரெக்ட் ஆ வருவேன்’ என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply