இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்த மாதம் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் கொல்கத்தா மற்றும் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த தொடர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. டிசம்பரில் வேறு தொடரை நடத்த முயற்சித்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியா வங்கதேசம் இடையேயான தொடர்களை ஒத்திவைப்பது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர்களுக்கான புதிய அட்டவணைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அண்மையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்ததையடுத்து, இந்தியா-வங்கதேசம் இடையேயான தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.