மயிலாடுதுறையில் ரூ.51 கோடி மதிப்பில் கடனுதவி:அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறையில் ரூ.51 கோடி மதிப்பில் கடனுதவி:அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறையில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் ரூ.51 கோடி மதிப்பிலான கடனுத்விகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் நடைபெற்ற கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட அட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், நமது கூட்டுறவுத்துறை அமைச்சர் நவம்பர் 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்தார். அந்த அடிப்படையில், இன்றைய தினம் நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த கூட்டுறவு வார விழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக நாம் அனைவரும் கூட்டுறவுத்துறையின் சிறப்புகளை உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம்.

இந்த ஆண்டு முதல் கூட்டுறவுத்துறைக்கான தீம் சாங் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டு, இன்று அதற்கான பாடல் வெளியிடப்பட்டு, அதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம். அப்படிப்பட்ட இந்த கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்காக, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக, மாற்றுத்திறனாளிகளுக்காக இப்படி அனைத்துத்தரப்பினருக்கும் பயன்படக்கூடிய ஒரு துறையாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாத நிலையை உணர்ந்து, இந்தியாவில் எந்த முதலமைச்சரும் யோசிக்காத திட்டத்தை குறித்த காலத்தில் அந்த கடனை திருப்பி செலுத்தினால் வட்டி இல்லாமல் கடன் வழங்கியவர் நம் முத்தழிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தின் அடிப்படையில், தற்போது, நமது தமிழ்நாடு முதலமைச்சர் , வேளாண்மைத்துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை தந்து விவசாயிகளை பாதுகாத்தவர்.

அதேபோல், விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், நவீன எந்திரமாக்கல் என்ற அடிப்படையில், வேளாண்மைத்துறை மூலமாக உங்களுக்கு தேவையான அந்த இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், இன்றைக்கு விவசாயிகள் முன்னேறியுள்ளனர். விவசாயத்தில் உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது. 2025-26 ஆண்டுக்கான கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 1 இலட்சம் கோடி கடனாக வழங்க இலக்கு உள்ளது.

அந்த அடிப்படையில், நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு அறநூற்று எழுபத்து ஒன்பது கோடி வழங்கி சாதனை செய்துள்ளது. இதன்மூலமாக 1 லட்சத்து 1 ஆயிரத்து 809 பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல், மகளிர் உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மட்டுமில்லாமல், நமது  தமிழ்நாடு துணை முதலமைச்சர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவி வழங்குகின்ற அந்த துறையை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி கடந்தாண்டு மகளிர சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்கி, சாதித்தவர்.

நமது கூட்டுறவுத்துறையின் மூலம் 31/10/2025 தேதி வரை 814 மகளிர் குழுக்களுக்கு ரூ.80 கோடி கடன் வழங்கியுள்ளது. கூட்டுறவுத்துறை மூலமாக மாற்றுதிறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடம் வகித்து வருகிறது. மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான விலையில்லா ஸ்கூட்டர் உள்பட அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், உதவித்தொகை இப்படி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் கடனுதவி கேட்டு, மனு வழங்கியவுடனே, அதனை பரிசீலனை செய்து, உடனடியாக வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் நமது மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 நபர்களுக்கு ரூ.17 இலட்சத்து 57 ஆயிரம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு வார விழாவானது, விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு. மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக அமைத்திருக்கின்றது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம் 6850 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், சுயஉதவிக்குழுக்கடன், கறவை மாட்டு கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறுவணிக கடன், வீட்டுவசதி கடன், மகளிர் தொழிற்கடன் என ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன், நகரமன்ற தலைவர் செல்வராஜ், சீரகாழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஷ்வரி,கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.