டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

கடந்த நவ.,10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே டாக்டர் உமர் நபி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதல் தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்,டெல்லி கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முஸ்லிம் சமூகத்தில் தற்கொலை என்பது தடை செய்யப்பட்டது. அப்பாவி மக்களை கொல்வது பாவம் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சட்டத்திற்கு எதிரானவை. அவனது செயல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது அல்ல. டெல்லியில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாத தாக்குதல் தான்என அசாதுதீன் ஒவைசி பதிவிட்டுள்ளார்.
Leave a Reply