லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியிலும் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் அரையிறுதிப் போட்டியில் இடர் மியாமியும் எப்ஃசி சின்சினாட்டி அணியும் மோதின. இந்தப் போட்டியில் 4-0 என இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்றது. மெஸ்ஸி 19-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். மேலும், 3 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட் மற்றும் 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலம், கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.
அதன்படி, கோல்கள் பங்களிப்பில் 1,300 (896 கோல்கள் + 404 அசிஸ்ட்ஸ்) என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி வரலாறு படைத்துள்ளார். அதிக கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 1,213 கோல்கள் (954 கோல்கள் + 259 அசிஸ்ட்ஸ்) சாதனையை குறைவான போட்டிகளில் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். மேலும், கான்பரஸ் இறுதிப் போட்டியில் இண்டர் மியாமி அணியுடன் நியூயார்க் சிட்டி அணி மோதுகின்றன.

Leave a Reply