தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார். இதில் இளம் நடிகர் திருவீர் நாயகனாக நடிக்க உள்ளார்.
சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார். படப்பிடிப்பு வருகிற டிச.19-ஆம் தேதி தொடங்குகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த படத்திற்கான டைட்டிலை படக்குழு இன்று(டிச.03) அறிவித்துள்ளது. அதன்படி, படத்திற்கு “ஓ சுகுமாரி” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply