Site icon Metro People

அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு முறை.. ஆண்களுக்கு முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

குறைந்தபட்சம் பொதுப்பிரிவில் பாலின அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் முறையை விடுத்து மதிப்பெண் அடிப்படையில் ஆண், பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்பட வேண்டும் என போட்டி தேர்வர்கள் கூறுகின்றனர்.

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30சதவிகிதமாக உள்ள  இடஒதுக்கீடு 40சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் பொதுப்பிரிவில் பாலின அடிப்படையில் அல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் முன்னூரிமை அளிக்கப்பட்டு  பெண்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பணிகளில் பெண்களுக்கு தனியாக 30 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை 40 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அரசு பணிகளுக்கு ஆண்கள் செல்வதை நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் போட்டித் தேர்வுகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள். அரசு பணிகளுக்கான ஒவ்வொரு பணி அறிவிப்பிலும் பணிகளுக்கான எண்ணிக்கையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, அதேபோல பெண்களுக்கான சிறப்பு தனி இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது,

அதேபோல பொதுப் பிரிவிலும்  பெண்களுக்கு முன்னூரிமை அளிக்கப்படுவதால் தற்போது 70சதவிகிதம் பெண்கள் அரசு பணிகளுக்கு தேர்தெடுக்கப்படும் நிலையில் 40சதவிகிதமாக இட ஒதுக்கீடு அதிகரிக்கின்ற போது வருங்காலங்களில் 80சதவிகிதம் பெண்கள் மட்டுமே அரசுபணிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது 30 சதவீதத்திலிருந்து பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 40% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பிரிவில் பெண்களுக்கு பாலின ரீதியிலான முன்னுரிமை அளிப்பதை நிறுத்தி மதிப்பெண் அடிப்படையிலேயே ஆண் பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்பட வேண்டும் என்கின்றனர் பயிற்சி மையங்கள் மற்றும் போட்டி தேர்வர்கள்.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நேற்றைய தினம் #justice for men in tnpsc என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version