பொங்கல் தொகுப்புக்காக வாங்கப்படும் பன்னீர் கரும்பை இடைத் தரகர் இல்லாமல் அரசு கொள் முதல் செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் அருகேஉள்ள வேளக்குடி, வல்லம்படுகை, சேத்தியாத்தோப்பு பகுதி, கீரப்பா ளையம், குமராட்சி உள்ளிட்ட வட்டாரங்களில் பல்வேறு கிராமங் களில் விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிரிடுகின்றனர். சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கரும்பு நன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்று எண்ணி இருந்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் நேரடியாக விவசாயி களிடம் சென்று வாங்காமல் இடைத்தரகர்கள் மூலம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கூறுகையில், “தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல்பரிசு தொகுப்பில் கரும்புகள் வழங்குவதற்கு விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்து வழங்க வேண்டும்.
ஆனால் அதிகாரிகள் இடைத்தரகர்களை வைத்து விவசாயி களிடம் கரும்புகளை கொள்முதல் செய்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட ஒரு கரும்பின் விலை ரூ. 35 ஆகும். இடைத்தரகர் மூலம் கரும்புகள் வாங்கப்படுவதால் விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு ரூ. 13 மட்டுமே கிடைக்கிறது.
இதில் மீதமுள்ள ரூ. 22 இடைத்தரகர்கள் உள்ளிட்ட பலருக்கு சென்று சேருகிறது. இதை அதிகாரிகளே நேரடியாக எங்களிம் வாங்கினால் எங்களுக்கு ரூ. 35 முழுமையாக கிடைக்கும், நாங்களும் மகிழ்ச்சிய டைவோம்.
எனவே மாவட்ட நிர்வாகம் பன்னீர் கரும்பை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரடிய வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.