ணையவழியில் இன்று அதிகமாக விற்பனையாவது ஸ்மார்ட்போன்கள்தான். இதனால், வாடிக்கையாளர்களின் கைகளில் யார் முதலில் போனை கொண்டுபோய் சேர்ப்பது என்ற போட்டி இப்போது தீவிரமாகியுள்ளது.
குயிக் காமர்ஸ் எனப்படும் விரைவு வணிக நிறுவனங்கள் இதற்காக பிரத்யேகமாக மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போக்கு இன்று வெகுவாக அதிகரித்துள்ளது. வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட்டின் குயிக் காம் பிரிவான பிளிப்கார்ட் மினிட்ஸ் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அல்காடெல்லுடன் இணைந்து அதன் புதிய வகை ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் டெலிவரி செய்து வருகிறது.