‘முரா’ படத்தைத் தொடர்ந்து ஹிர்து ஹாரூன் நடிக்கும் படத்துக்கு ‘மைனே பியார் கியா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜியோ பேபி, காந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்குகிறார்.
தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு டான் பால். பி ஒளிப்பதிவு செய்கிறார். எலக்ட்ரானிக் கிளி இசையமைத்துள்ளார். ‘மந்தாகினி’ படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.