அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது.
போர்ட் பிளேர் பகுதியிலிருந்து தென்கிழக்கே 233 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.8ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை