நடிகர்கள் யாருமின்றி, படக்குழு, தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியின்றி முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு திரைப்படம் கன்னடத்தில் உருவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சித்தஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா மூர்த்தி. கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து இப்படத்தை நரசிம்மா உருவாக்கியுள்ளார். ’லவ் யூ’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.10 லட்சம் தானாம். அதுவுமே கூட மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. இசையமைப்பாளரோ, ஒளிப்பதிவாளரோ யாரும் கிடையாது. சென்சார் போர்டும் இப்படத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதால் இனி அடுத்தடுத்து ஏஐ படங்கள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தப் படம் வெளியானால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெரும் என்று இதனை உருவாக்கிய நரசிம்மா மூர்த்தி கூறுகிறார். எனினும் கடந்த 2024-ஆம் ஆண்டு ’வேர் தி ரோபோட்ஸ் க்ரோ’ என்ற ஏஐ திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.