டொவினோ தாமஸ், சேரன் நடித்துள்ள ‘நரிவேட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினா தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நரிவேட்டா’. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். போலீஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மே 16 அன்று வெளியாகிறது.
ட்ரெய்ல்ர் எப்படி? – தங்கள் நிலத்துக்காக போராடும் பழங்குடியின மக்கள் – சிஸ்டம் / போலீஸ்/ அரசுக்கும் இடையிலான மோதலே படத்தின் அடிநாதம் என்று தெரிகிறது. காட்டை ஆக்கிரமித்திருப்பதாக கூறி பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அவர்களிடம் சேரன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோடு தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறைகளையும், அராஜகங்களையும் காட்டுகிறது. இளம் போலீஸ் அதிகாரியாக வரும் டொவினோ தாமஸின் கேரக்டர் நெகட்டிவ் தன்மை கொண்டதாக காட்டப்படுகிறது. விஜய்யின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் கவனம் ஈர்க்கின்றனர். ட்ரெய்லர் வீடியோ: