நடிகர் ரியோராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. படத்தின் முதல் ஷாட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜையில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.
‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி ஹரன் ராம் இப்படத்தை இயக்குகிறார். மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா ஆகியோர் படத்தின் நாயகிகளாக நடிக்கின்றனர். சார்லி, ‘கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ பட புகழ் சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் இப்படம் பேசும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.